Advertisement

Responsive Advertisement

மலேசியா விமானம் ஆஸ்திரேலிய கடலில் செங்குத்தாக விழுந்து 1500 அடி ஆழத்தில் உள்ளதா? அதிர்ச்சி தகவல்.(வீடியோ)

மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆஸ்திரேலிய கடலில் மிதப்பதாக வந்த தகவல்களை அடுத்து அந்த பகுதியை நோக்கி சென்ற மீட்புப்படைகள் மோசமான வானிலை காரணமாக அந்த பகுதியை நெருங்க முடியாமல் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கே 1500 மைல்கள் தூரமுள்ள கடல்பகுதியில் விமானத்தின் உடைந்த சில பாகங்கள் மிதப்பதாகவும், கடலின் அடியின் மிகப்பெரிய இரண்டு பொருட்கள் இருப்பதை ஆஸ்திரேலிய சாட்டிலைட் படம் பிடித்ததாக வந்த தகவல்களை அடுத்து நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மீட்புக்குழுவின் ஒரு பகுதி அந்த இடத்தை நோக்கி விரைந்தது.

நேற்று மலேசிய விமான அதிகாரிகளின் ஒரு பேட்டியில் விமானம் பைலட்டுக்களால் கடத்தப்படவில்லை என்றும், விமானத்தின் உள்ளே ஏற்பட்ட அழுத்தக்கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் இருக்கும் வரை பைலட்டுகளுக்கு கட்டுப்படாமல் பறந்து சென்றதாகவும், பின்னர் விமானம் செங்குத்தாக கடலில் விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
இதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி முடிவுக்கு வருகிறாது. மேலும் கடலில் 1500 அடி ஆழத்தில் இருக்கும் விமானத்தின் பாகங்களையும் அதில் சிக்கியுள்ளவர்களையும் மீட்பது என்பது சாதாரண காரியமில்லை. இதற்கு மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சற்று நம்பிக்கையுடன் இருந்து பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Post a Comment

0 Comments