அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த 28ம் திகதி தொடக்கம் அவ்வப்போது பனிப்புயல் வீசுகிறது. இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.6 அங்குலம் உயரத்துக்கு பனி கொட்டியது. இதனால் 2 வாரகாலமாக மக்கள் அவதிக்குள்ளானார்கள். லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தார்கள். சில தினமாக இதன் தாக்கம் சற்று குறைந்தது.
இதற்கிடையில் மேலும் 3 தினங்களுக்கு கடும் பனிப்புயல் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது. டெக்சாஸ் மாகாணம் முதல் வடக்கு கரோலினா வரையில் கடுமையாக பனிக்கட்டி ஐஸ் மழை இருக்கும் என்றும் கூறப்பட்டது.இதனை அடுத்து பல மாநில கவர்னர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஜார்ஜியா மாகாண கவர்னர் நாதன் டேயல் இதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்ததுடன் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியில் அவசரநிலையை பிரகடனம் செய்தார்.
இதுபோல அட்லாண்டா மேயர் காசின் ரேட் அந்த பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு 2 நாள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார். மிச்சிசிப்பியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.வடகிழக்கு ஜார்ஜியா மற்றும் மேற்கு கரோலியா பகுதிகளில் 6 அங்குலம் முதல் 8 அங்குலம் பனி கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து, ரெயில் சேவை, மின்சார வினியோகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது.
0 Comments