Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்றில் மனிதனும் யானையும் சடலமாக மீட்பு; மின் வேலியில் சிக்கி உயிழந்திருக்கலா மென சந்தேகம்

குடும்பஸ்தர் ஒருவரும் யானை ஒன்றும்  உயிரிழந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் பகுதியிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

ஆதம்பாவா யாக்கூப் (48) என்னும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் தான் வளர்த்து வரும் மூன்று மாடுகளில் ஒன்று வீட்டிற்கு வராமையால் அதனைத்  தேடிக் கொண்டு நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் சென்றவர் இறந்த நிலையில் அஷ்ரஃப் நகர் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக் காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டார். 

இதேவேளை இறந்தவரின் சடலம்  உள்ள இடத்திலிருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் யானையொன்று காயங்களுடன் இறந்த நிலையில் காணப்படுகின்றது.

யானை துரத்தி வந்ததால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவென ஓடி வந்த நிலையில் அப்பகுதி விவசாயிகளால் பாதுகாப்பிற்கென சட்ட விரோதமாக போடப்பட்ட மின்கம்பியில் தாக்குண்டு இறந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கேற்றால் போல் இறந்தவரின் கைகள் மற்றும் உடம்பில் எரிகாயங்கள் காணப்படுகின்றன.இறந்தவர் பாலமுனை ஹிறா நகர்ப் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

விவசாயியான இவர் சில வேளைகளில் இரவு நேர வேட்டைக்குச் சென்று வருபவர் எனவும், யானை தன்னை தாக்க வந்தபோது இவர் யானையினை சுட்டு விட்டு தப்பிக்க முற்பட்ட வேளை மின்கம்பியில் சிக்குண்டு தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

இறந்தவரின் தோளில் சொட்கண் ரக துப்பாக்கி காணப்பட்டது. மக்கள் குடியிருப்பு பகுதியினை நோக்கி ஒடி வந்த நிலையில் மின்கம்பியில் தாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார். இது பற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments