சீனாவில் இடம்பெறும் விபச்சாரத் தொழிலை கட்டுப்படுத்த அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் தென்பிராந்திய நகரான டொங்வனில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 67 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர பாலியல் தொழில் முன்னெடுக்கப்பட்ட 12 இடங்களுக்கும் பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு உதவி புரிந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சீன பொலிஸாரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் விபச்சாரம் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் பரவலாக இந்த தொழில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்ட டொங்வன் நகரம் விபச்சார தலைநகரம் (capital of sex) என வர்ணிக்கப்பட்டுள்ளது.
சீன தேசிய தொலைக்காட்சியில் ஔிபரப்பான (CCTV) நிகழ்ச்சி ஒன்றின் புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments