திருமணம் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு ஆசி வழங்கக் கூடாது என இங்கிலாந்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்களுக்கு தலைமை பிஷப்கள் கட்டளையிட்டுள்ளனர்.இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிஷப்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களுக்குள் வழிபாட்டுக்காக ஓரினச்சேர்கையாளர்கள் வரலாம். ஆனால்,தி ருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சடங்கு- சம்பிரதாய விழாக்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணங்களுக்குதான் பொருந்தும். ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணத்தை தேவாலயங்களில் நடத்த அனுமதிக்க கூடாது.
அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு ஆசி வழங்கவும் கூடாது என இங்கிலாந்தில் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதிரியார்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைப் பொருத்தவரை கடந்த 2005-ம் ஆண்டில் இருந்தே ஓரினச்சேர்க்கையாளர்களுக்குள் நடக்கும் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற தம்பதியருக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு பொருந்தும் என அரசு அறிவித்திருந்த நிலையில் பிஷப்களின் இந்த புதிய கட்டளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பாதிரியார் விரும்பினால், அவர் பணியாற்றும் தேவாலயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு திருமனம் நடத்தி வைக்கலாம் என்ற உரிமை இதற்கு முன்னர் வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்த புதிய கட்டளையின் மூலம் பாதிரியார்களின் அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments