.jpg)
காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, தனது காதலரான சிம்புவைப் பிரிந்த செய்தியை ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் மிகவும் சூட்சுமமாக சொல்லியிருக்கிறார் நடிகை ஹன்சிகா.
சிம்புவும் ஹன்சிகாவும் தங்கள் காதலைச் சொன்னது இதே ட்விட்டரில்தான். ஒரு நாள் அதிகாலை இருவரும் காதலிப்பதாக ட்வீட் செய்து பரபரப்பு கிளப்பினர். ரொம்ப குறுகிய காலமே இந்த காதல் நிலைத்தது.
ஹன்சிகாவுடன் காதல் செய்து கொண்டே, தனது அடுத்த படத்துக்காக முன்னாள் காதலி நயன்தாராவை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்தார் சிம்பு. இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் செய்தி வெளியானதும், ஹன்சிகா தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார்.
அடுத்து ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். இப்போது மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ள ஹன்சிகா, காதலர் தினத்தன்று, 'தனக்கு யாருடனும் உறவில்லை' என்றும், 'சிங்கிளாக மகிழ்ச்சியாக' இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 'Celebrating my day with my single ladies!'- இதுதான் அந்த ட்வீட்!
.jpg)
.jpg)

.jpg)
0 Comments