Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கிழக்கு பல்கலைக் கழக காட்சிக்கூடம்


 
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 2014ல் கிழக்கு பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையினரின் சமூக நிலைப்பட்ட மாணவர் மைய கல்வி செயற்பாட்டின் முன்நெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட விடயங்கள் காட்சி கூடமாக தயார் செய்யப்பட்டு வருகின்றது. இதனை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள் கலைஞர்கள் அனைவரும் இணைந்து தயார்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இதில் தமிழர் பாரம்பரிய கூத்துக்களரி, தோரணம், அறிவையும், திறனையும் வெளிப்படுத்தும் சுவடுகள் பொருட்கள் என்பன இக்காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி  குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய எனும் இடத்தில் 21.02.2014ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டு எதிர்வரும் 28.02.2014ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 






Post a Comment

0 Comments