48 வயது தைவான் பெண் ஒருவரின் காது வலிக்கு, அவரது காதில் புழு ஒன்று முட்டையிட்டு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்ததுதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தைவான் மருத்துவமனை ஒன்றில் ஒரு 48 வயது பெண் ஒருவர் தனக்கு கடந்த 24 மணிநேரமும் காது பயங்கரமாக வலிப்பதாக கூறினார். மருத்துவர்கள் அவருடைய காதின் உள்ளே சோதனை செய்து பார்த்தபோது, காதின் நடுப்பகுதியில் புழு ஒன்று முட்டையிட்டு வாழ்ந்து கொண்டிருந்ததை அதிர்ச்சியுடன் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர் அந்த புழுவையும், முட்டைகளையும் அகற்றிவிட்டு, காது முழுவதையும் சுத்தம் செய்த பின்னர்தான் அப்பெண்ணுக்கு காது வலி நின்றது. இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தைவானில் உள்ள Tri-Service General Hospital என்ற மருத்துவமனையில் நடந்தது.
0 Comments