அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் வெட்டுவாய்க்கால் பகுதியில் இன்று(17.02.2014) இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், கல்முனை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாத்தறை, அகுரஸ்ஸ, குடாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மொகமட் ரிப்னாஸ், மொகமட் ரினாஸ் ஆகிய இரு இளைஞர்களே பலியானவர்களாவர்.
ஒருவர் ஸ்தலத்திலும், மற்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னருமே உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் குறித்த இளைஞர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.tm17214

0 Comments