
பிரேசிலில் உள்ள 84 வயது பெண் ஒருவர் தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக சமீபத்தில் Palmas என்ற நகரத்தில் உள்ள Porto Nacional Hospital மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்து பார்த்தபோது, அவருடைய வயிற்றில் 20 முதல் 28 வாரங்கள் வளர்ச்சியடைந்த குழந்தை இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, தான் 40 வருடங்களுக்கு முன்னர் கர்ப்பமடைந்ததாகவும், அதன்பின்னர் அந்த கர்ப்பம் கலைந்துவிட்டதாக அப்போது தன்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறியதால், கர்ப்பம் குறித்து தான் மேற்கொண்டு எவ்வித சிகிச்சையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் உண்மையில் 44 வருடங்களுக்கு முன் கர்ப்பமான அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை திடீரென கருவிலேயே இறந்துவிட்டது. இந்த உண்மை தெரியாமல் 44 வருடங்களாக தனது வயிற்றில் குழந்தை இருப்பதே தெரியாமல் அந்த பெண் வாழ்ந்து வந்துள்ளார்.
அதன்பின்னர் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு சர்ஜரி செய்து 44 வருடங்களாக அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழநதையை வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பெண்ணின் பெயர் மற்றும் விவரங்களை தெரிவிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments