Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஆரையம்பதியில் சுவாமி விவேகாநந்தரின் பிறந்த தின நிகழ்வு

சுவாமி விவேகானந்தரின் 152 வது ஜனன தின நிகழ்வு (13.01.2014) ஆரையம்பதியில் மிகச்சிறப்பாக நகர் வலத்துடன் நடைபெற்றது.முனன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வழிகாட்டுதலின் கீழ் இந்து அமைப்புக்கள் ஆலயங்கள் இவர்த்தகர் சங்கம்இ ஆட்டோசங்கம்இ பாடசாலை மாணவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப் பட்ட இன் நிகழ்வு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆரையம்பதிச் சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் காத்தான்குடி எல்லைவரை சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகாநந்தரின் திருவுருவச்சிலைக்கு ஸ்ரீ கந்த சுவாமி ஆலய பூசகர் சிவஸ்ரீ சோதிநாதக் குருக்கள் அவர்களினால் விஷேட பூசைகளும் நடத்தப்பட்டு  மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் சுவாமி விவேகாநந்தரின் புகழுரைகளும் இடம் பெற்றன.
இன் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் முனன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் ஆற்றல் பேரவை தலைவருமான பூ.பிரசாந்தன் வர்த்தகர் சங்த்தலைவர் அ.சசிகுமார்இ ஆட்டோசங்கத் தலைவர் குகராஜ் இஇந்து அமைப்புபிரதிநிதி சுதர்சன்இ மன்முனைப்பற்று ப.நோ.கூ. சங்கத்தரைவர் சிவசுந்தரம்இ பாடசாலை அதிபர்கள் தவேந்திரகுமார்இ திருமதி.தங்கவடிவேல்இ மதிசுதன் ஆசிரியர் ரமணன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முனன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனினால் 2011.01.10ம்திகதி அமைக்கப்பட்ட சுவாமி விவேகாநந்தரின் திருவுருவச்சிலை அன்று நள்ளிரவிலேயே இனம்தெரியாத குளப்பக்காரர்களினால் உடைக்கப்பட்டு பின்னர் 2011 ஏப்ரலில் மீண்டும் முனன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விவேகாநந்தரின் திருவுருவச்சிலை அவ்விடத்திலேயே நிறுவப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

                         
                         

Post a Comment

0 Comments