Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுனாமி அனர்த்தத்தில் பலியானவர்களுக்கு நினைவுப்பிரார்த்தனை

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பிலியானவர்களுக்கான நினைவுப்பிரார்த்தனையும், நன்றி தெரிவிப்பும் மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் நாளை பகல் நாவலடி கடலாச்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது
சுனாமி அனர்த்தத்தில் பிலியானவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நினைவுப்பிரார்த்தனை நிகழ்வில் அனைத்துப்பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு சபையின் தலைவர் வ.கமலதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், சுனாமியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தன் பல்வேறு பகுதிகளையும் மீளுக்கட்டியெழுப்புவதற்கு எல்லா வகைகளிலும் உதவிகளைச் செய்து தந்த சர்வதேச, உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இந்த இடத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் 2004ஆம்ஆண்டு டிசம்பர் 26ஆம்திகதி காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையின் கரையோரப்பகுதிகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்தன. அதனால் இலங்கை வரைபடத்திலேயே ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்த ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3000பேர் பலியாகியிருந்தனர். அதில் நாவலடிக்கிராமமே அதிக அழிவுகளைச் சந்தித்ததுடன், அக்கிராமத்தில் இருந்த அனேகமானவர்கள் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டமையைத் தொடர்ந்து மட்டக்களப்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு நினைவுப்பிரார்த்தனைகள் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments