கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையமும் இணைந்து கல்முனை மா நகரில் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் பாரிய அளவில் இடம்பெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கல்முனை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கபார், ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் இச்சிரமதானத்தை ஆரம்பித்து வைத்து- வழிநடாத்தினார்கள். இச்சிரமதானப் பணிகளில் மாநகர சபை ஊழியர்களுடன் பொலிசார், விசேட அதிரடிப் படையினர், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றுள்ளனர்.
0 Comments