Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு (படங்கள்)

சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதற்தடவையாக உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம்இன்று வெள்ளிக்கிழமை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை உள நல வைத்திய நிபுணர் டாக்டர் சுசிகளா பரம குரநாதனினால் உளநல நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.

இன்று திறந்துவைக்கப்பட்ட உள ஆரோக்கிய சிகிச்சை நிலையத்தில் உளநல நோயாளிகள் இங்கு எவ்வித தங்கு தடையுமின்றி வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் விரைவில் உளநல நோயாளிகளுக்கான விடுதி வசதிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments