வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகளின் நிலைமைகள் தொடர்பில் ஆராயவென விசேட சந்திப்பொன்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாண கடற்றொழில் அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிறிமூஸ் சிராய்வா , வைத்திய கலாநிதி குணசீலன் ,வட மாகாண சுகாதார பணிப்பாளர் திருமதி.எஸ்.ஆர்.யூட் , வட மாகாண சுதேச வைத்திய பணிப்பாளர் திருமதி. துரைஇரட்ணம், பிராந்திய சுகாதார பணிப்பாளர் என்.பறீட் மற்றும் ஏனைய பிராந்திய வைத்தியர்கள் மற்றும் தன்னார்வுத்தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் பின்தங்கிய பாதிக்கப்பட்ட கிரமங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கான நடமாடும் சுகாதார வைத்திய சேவைகள் வழங்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் , எச்.ஜ.வி நோயாளருக்கான விசேட திட்டங்கள் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டது.
0 Comments