காதலருடன் இணைந்த வீடியோ இருப்பதாக அச்சுறுத்தி யுவதியை மூன்று இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவதுஇ பலாங்கொடைப் பிரதேசத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் 14 வயது யுவதியுடன் காதல் தொடர்பு வைத்திருந்த 17 வயது இளஞரொருவர் யுவதியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.
இந்த இருவரது காதல் தொடர்பை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர்கள் மூவர் தம்மிடம் காதலர்களின் வீடியோ நாடா இருப்பதாகக்கூறி யுவதியை அச்சுறுத்தி அக்டோபர் 26 ஆம் திகதியும் 28 ஆம் திகதியும் யுவதியை முச்சக்கர வண்டியில் ஏற்றி பலாங்கொடை பிரதேசத்திலுள்ள பற்றைக்காடொன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஒரு இளைஞர் யுவதியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த மறுப்புத் தெரிவித்ததையடுத்து ஏனைய இரு இளைஞர்களும் யுவதியை துஷ்பியோகத்திற்குட்படுத்தியுள்னர்.
சிறுமியின் காதலன் பாடசாலை மாணவன் எனக்கூறப்படுவதுடன் ஏனைய மூவரும் பாடசாலையை விட்டு விலகியவர்கள் எனக்கூறப்படுகின்றது.
யுவதி தமக்கு நேர்ந்த சம்பவத்தை நண்பி ஒருவர் மூலம் தாயாருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்து தாயார் நவம்பர் முதலாம் திகதி பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பலாங்கொடை பொலிஸார் யுவதியின் காதலனையும் மற்றொரு இளைஞனையும் அன்றைய தினமே கைது செய்துள்ளனர். ஏனைய இரு இளைஞர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
யுவதி வைத்திய பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவரும் காதலியின் நண்பர்களென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
0 Comments