யாழ்ப்பாணத்துக்கு கமரூன் வருகை தந்திருந்தபோது யாழ்.பொதுநூலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவினர்களையும், அருட்தந்தையர்களையும் காவல்துறையினர் தாக்கியது உண்மையே. அதனை அவர்கள் மறுக்க முடியாது. இவ்வாறு நேற்று தெரிவித்தார் தாக்குதலுக்கு இலக்கான அருட்தந்தை யூட் நிக்ன் அடிகள். பிரிட்டன் பிரதமரின் வருகையின் போது பொது நூலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவினர்களையோ, அருட்தந்தையர்களையோ தாம் தாக்கவே இல்லை என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எம்.எம்.ஜிவ்றி தெரிவித்தார். இது குறித்த சம்பவத்தின் போது தாக்குதலுக்கு இலக்கான அருட்தந்தை யூட். நிக்னிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட மக்களையும் அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மை என்று அவர் அடித்துக் கூறினார்.
|
இது குறித்து நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்ததாவது: போராட்டம் நடத்தியவர்கள் மீதோ, அருட்தந்தையர்கள் மீதோ பொலிஸார் தாக்குதல் நடத்தவே இல்லை. அங்கு நின்ற காவல்துறையினர் லத்தியைக் கூட கையில் வைத்திருக்கவில்லை. அங்கு தவறி விழுந்த பெண்ணொருவரை காவல்துறையினரே தூக்கி விட்டிருந்தனர் - என்றார்.
|
0 Comments