Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெர்மனியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் மரணம்

ஜெர்மனியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெர்மனியின் ஸ்டுட்காட் பிரதான நகருக்கு அருகில் உள்ள மாக்குரோய்னிகன் என்ற நகரில் வசித்து வந்த அலெக்சாண்டர் பீரிஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் அதிகாலை மணியளவில் மோட்டார் சைக்கிளில் நகருக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது பென்ஸ் கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தார். பென்ஸ் காரை ஓட்டிச் சென்ற 45 வயதான ஜெர்மனிய சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பை சேர்ந்த டொனால்ட் பீரிஸ் மற்றும் ஆன் நிலாந்தி ஆகியோர் இளைய புதல்வரான அலெக்சாண்டர் மின் தொழிற்நுட்பவியலாளராக தனது தந்தையுடன் தொழில் புரிந்து வந்தார்.

Post a Comment

0 Comments