Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வட மாகாண ஆளுநருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் முதல் முறுகல்..

வட மாகாணசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பெறுப்பேற்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தமக்கு விளக்கமளிக்குமாறு ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஏதேச்சதிகாரமாக விடுத்த அழைப்பினை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களினால் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக தமக்கு விளக்கமளிக்குமாறு ஆளுநர் அண்மையில் முதலமைச்சருக்கு எழுத்து மூலம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்றினை கூட்டிய முதலமைச்சர், குறித்த கடிதத்திற்கு அமைவாக எவரும் ஆளுநரிடம் செல்லக் கூடாதெனவும், வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கத்தை கொடுக்க கூடாதெனவும் கூறியுள்ளதுடன், சற்று கடுமையான தொனியில் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆனால் அந்த கடிதத்தின் சாராம்சம் ஆளுநரின் அழைப்பினை முழுமையாக நிராகரிப்பதாக அமைந்திருந்தாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments