Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார் சத்யராஜ்

சென்னை பெரம்பூர் நெல்வாயல் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அலுவல கத்தில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர், புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர், லயோலா கல்லூரி மாணவர் என மூன்று மாணவர்களும் கடந்த 5 நாட்களாக இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
முதல் நாள் உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டத்தை ஆரம்பத்தனர்.  போலீசார் அனுமதி மறுக்கவே,  வெள்ளையன் அலுவலகத்தில் அனுமதி கேட்டகே, அனுமதி தரப்பட்டது.
இலங்கையின் வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் மற்றும் ஆனூர் ஜெகதீசன் ஆகியோரை தொடர்புகொண்டு, மாணவர்களை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளு மாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நடிகர் சத்யராஜ், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகிய இருவரும் இன்று மாணவர்களை சந்தித்து, அவர்களூக்கு இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

Post a Comment

0 Comments