Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

‘இன்று எமது மக்கள் பயன்படுத்திய பறை மேளத்தினை எடுத்துக் கொண்டுதான் கண்டியன் நடனத்தை சிங்களவர்கள் ஆடுகின்றார்கள்

இன்று எமது மக்கள் பயன்படுத்திய பறை மேளத்தினை எடுத்துக் கொண்டுதான் கண்டியன் நடனத்தை சிங்களவர்கள் ஆடுகின்றார்கள். இதிலிருந்து எங்களை நாம் நாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒருபக்கம் அந்நிய நாட்டுக்கலாசாரம், மற்றப்பக்கம் சிங்கள் கலாசாரம். இவற்றிலிருந்து நாம் எம்மை பாதுகாத்து விழிப்புடன் செயற்பட வேண்டும்’ என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
‘மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனையோ பௌத்த விகாரைகள் இராணுவ முகாம்களில் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இராணுவங்கள் வெளியேறும்போது அங்கு பௌத்த விகாரைகளிருந்த இடங்களிலெல்லாம் பௌத்த வாழ்விடங்களாக மாற்றமடையப் போகின்றன’ என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு கிராமத்தில் திங்கட்கிழமை (4) தேனுகா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உiராயற்றிய அவர்,
‘நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களைப் புனரமைப்பதில்கூட இராணுவம் தலையிடுகின்றது. பல இந்து ஆலயங்களைப் புனரமைப்புச் செய்யச்செல்லும்போது அதனை ஏன் செய்கின்றீர்கள்? எதற்குச் செய்கின்றீர்கள்? என்ற கேள்விகளை எழுப்பு இராணுவத்தினர் சமயரீதியாகவும் சமூக ரீதியாகவும் எமது மக்களை அடக்க முற்படுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனையோ பௌத்த விகாரைகள் இராணுவ முகாம்களில் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இராணுவம் வெளியேறும்போது பௌத்த விகாரைகளிருந்த இடங்கலெல்லாம் பௌத்த வாழ்விடங்களாக மாற்றமடையப் போகின்றன.
இந்த நாட்டில் நமக்கு பலவகைகளியில் துன்பங்கள் வந்து கொண்டிருக்கிறன. எங்களது காலாசாரத்தினை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மறைமுகமாகச் செயற்படுகின்றது. குறிப்பாக பாதுபாப்புப் படையினரை அதற்குப் பின்னணியாகச் பயன்படுத்துகின்றது.
இன்று எமது மக்கள் பயன்படுத்திய பறை மேளத்தினை எடுத்துக் கொண்டுதான் கண்டியன் நடனத்தை ஆடுகின்றார்கள். இதிலிருந்து எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒருபக்கம் அந்நிய நாட்டுக்கலாசாரம், மற்றப்பக்கம் சிங்கள் கலாசாரம் இவற்றிலிருந்து நாம் பாதுகாத்து விழிப்புடன் செயற்பட வேண்டும்’ என அவர் தெரிவித்தார்



Post a Comment

0 Comments