Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் விபத்தில் பலி

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இன்று (7ம் திகதி) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இன்று காலை  பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பிரதியதிபர் ஒருவர் உட்பட் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமத்திக்கப் பட்டிருந்தனர்.
காயமமைடந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்கடர் முருகானந்தம் தெரிவித்தார்.

இவ்விபத்தில் படுகாயமடைது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்தகழியைச் சேர்ந்த  பிரதி அதிபர் இராசையா ராஜபாலேந்திரன் (வயது 50) என்பவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

Post a Comment

0 Comments