இடம்பெயர்ந்த சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்த கோரியும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும் கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
இவ்விடத்தில் இன்று சனிக்கிழமைக்;காலை ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்க காணிக்குள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளுடன் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபடமுடியாது என்று பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்தே அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.
0 comments: