கொழும்பு சென்தோமஸ் கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு சென்தோமஸ்கல்லூரிக்கும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருந்த க்ரோதர் சலன்ஞ் வெற்றிக்கிண்ணத்துக்கான (பிக் மச்) கூடைப்பந்தாட்டப் போட்டிக்காகச்சென்ற யூஜின் டிலக்சன் (15) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பின்னர் சடலம் மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணை, பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சடலம் இன்றைய தினம் மட்டக்களப்பு க்கு கொண்டு வரப்படுகிறது அத்துடன் சிறந்ததொரு கூடைப்பந்தாட்ட வீரனை மட்டக்களப்பு இழந்து நிற்பதாகவும் பயிற்றுவிப்பாளர் சுரேஸ் றொபட் தெரிவித்தார். அதே நேரம், இவ் மாணவனின் மரணம் காரணமாக நடைபெறவிருந்த இந்த கூடைப்பந்தாட்டப் போட்டி நிறுத்தப்பட்டது. 15வயதுக்குட்பட்டவர்களும், 19 வயதுக்குட்டவர்களுமாக இரண்டு அணிகளுக்கு இப்போட்டி நடைபெறவிருந்தது. 94களில் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டி அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு இரண்டு கல்லூரிகளுக்குமிடையில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் நிறுத்தப்பட்டு இந்தவருடம் இப்போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககதாகும்.
0 comments: