Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை.

துறைநீலாவணை பெரியநீலாவணை.பெரியகல்லாறு. கோட்டைக்கல்லாறு. ஓந்தாச்சிமடம். முகிழூர் குருமண்வெளி கிராம மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை ஆற்றிவரும் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் டாக்டர். தாதியர் சிற்றூழியர் பற்றாக்குறை நிலவி வருவதால் சிகிச்சை பெற வருவோரும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதால் உடன் இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ம.ருதேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்; ஆளணி சம்பந்தமாக பின்வருமாறு குறிப்பிட்டார். இவ் வைத்தியசாலைக்கான ஆளணியில் நிற்றூழியர் 42 பேருக்கு இடமிருந்தும் தற்போது 27 பேர் மட்டுமே பணிபுரிவதால் அன்றாட கருமங்களை கொண்டு நடாத்துவதில் பலத்த சிரமங்களை எதிர் கொள்வதாகத் தெரிவித்தார். காலத்துக்கு காலம் 15 சிற்ஞ}ழியர்கள் இடமாற்றமும் ஓய்வும் பெற்றுச் சென்றுள்ளபோதும் கூட அவற்றிற்கான பிரதியீட இன்னும் செய்யப்படாமலேயே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தன்னுடன் ஒரு டாக்டர் மட்டுமே பணிபுரிவதால் இருவரும் ஓய்வின்றி செயற்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வைதியசாலையில் 6 டாக்டர்கள் கருமமாற்ற வேண்டிய நிலையில் தற்போது இருவர் மட்டுமே பணிபுரிய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காடடினார். கடந்த மாதம் மாற்றலாகிச் சென்ற ஒரு டாக்டருக்கான பிரதியீடும் இன்னும் செய்யப்படவில்லை. இந்த ஆளணிக் குறைபாடுகள் பற்றி மேலதிகாரிகளக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனவரி மாதமளவில் இக்குறைபாடுகள் ஓரளவு தீர்த்து வைக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments