கொழும்பு நகரும் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பையும், அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள குடிசைகளும், சேரிப்புற வீடுகளும் அகற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக மாடிவீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என பாதுகாப்புச் செயலாளரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எனினும், இந்தத் திட்டம் தொடர்பில் சிலர் தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கொழும்பிலும், அதனை அண்டிய முக்கிய மையங்களிலும் சீனாவின் பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
0 Comments