Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நடிகைகளுக்கு வகுப்பெடுக்கும் நடிகர்கள்!!

தமிழ்ப்படங்களில் சுத்தமாக தமிழே தெரியாத நடிகைகளை நடிக்க வைப்பது ஒரு பேஷனாகி விட்டது. படத்தின் கதாநாயகியை கேரளாவில் இருந்து கொண்டு வந்தோம், மும்பையில் இருந்து கொண்டு வந்தோம் என்று சொல்லிக்கொள்வதை பெருமையாகவும நினைக்கிறார்கள். ஆனால், அப்படி கூட்டி வரும் நடிகைகளை தமிழில் வசனம் பேச வைக்க இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் படாதபாடு படுகிறார்கள். அதையடுத்து, தமிழ் உச்சரிப்பு வராமல் மேற்படி நடிகைகள் பேசும் வசனங்களைக் கேட்டுவிட்டு, அவர்களுடன் நடிக்கும் நாயகர்கள் புரிந்து கொள்ள முடியாமல் படும்பாடு இன்னொரு கொடுமை. அதனால், இப்போதெல்லாம் சில நாயகர்கள் உஷாராக தாங்கள் வசனங்களை படித்துப்பார்க்கும்போதே, உடன் நடிக்கும் வேற்று மொழி நடிகைகளையும் அழைத்து சேர்ந்தே பயிற்சி எடுக்கிறார்கள். அப்படித்தான், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோது தமிழ் தெரியாத தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ் டியூசன் எடுப்பது போல் பயிற்சி கொடுத்து உதவி இயக்குனர்களுக்கு ஓரளவு சிரமத்தை குறைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் இப்போது அநேகன் படத்தில் தன்னுடன் நடித்து வரும் அம்ரியாவுக்கு ஒரு தமிழ் வார்த்தைகூட தெரியாது என்பதால், அவருடன் நடிக்க வேண்டிய காட்சிகள் வரும்போது வார்த்தைகளே எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அம்ரியாவுக்கு பயிற்சி கொடுத்து நடிக்கிறாராம் தனுஷ். இதனால், தனுஷை ஆக ஓஹொவென்று புகழ்ந்து தள்ளி வரும் அம்ரியா, நடிகைகளின் மொழிப் பிரச்சினையை நன்கு உணர்ந்திருக்கிறார் தனுஷ். அதனால் நான் தப்பு தப்பாக தமிழை உச்சரித்தாலும், அதை கண்டுகொள்ளாமல் நடிக்கிறார். முக்கியமான க்ளோசப் காட்சிகளின்போது வார்த்தைகளுக்கேற்ப உதடு அசைவு வரவேண்டும் என்று இயக்குனருடன் சேர்ந்து அவரும் எனக்கு சொல்லித்தருகிறார். அவர்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது ஓரிரு வார்த்தைகளில் தமிழில் பேசி வருகிறேன். இந்த அனேகன் படப்பிடிப்பு முடிவதற்குள் இன்னும் ஜாஸ்தியாக தமிழ் பேசக்கற்றுக்கொள்வேன் என்கிறார் அம்ரியா. 

Post a Comment

0 Comments