Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டாபுரத்தில் குளவி கொட்டி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஸ்வலிங்கம் பார்வதி (வயது 70) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இன்று வியாழக்கிழமை பகல் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பனை மரத்தின் கீழ் விறகு எடுப்பதற்காகச் சென்றபோதே இவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இவர் அங்கு விறகு பொறுக்கிக்கொண்டிருந்தபோது பனை மரத்திலிருந்த குளவிகள் இவரை சூழ்ந்து கொட்டியுள்ளன. குளவிக் கொட்டுக்கு இலக்கான இவர் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும்   அங்கு சசிகிச்சை பலனின்றி இவர்  உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments