பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் மூவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில்காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ,பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கையில் தனி தமிழீழம் உருவாகுவதற்கு தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்,
இலங்கை தூதரகங்களை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் மற்றும் பொதுநலவாய மாநாடுட்டிற்கு எதிராக போராட்டம் நடாத்தி கைது செய்யப்பட்டவர்ககளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைளை முன்வைத்தே இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸார் கைது செய்து பின்னர் நேற்று மாலை விடுதலை செய்தனர் .
எனினும் அவர்கள் நேற்று இரவு அண்ணா சாலையில் தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்ததுடன் இவர்கள் இன்று காலை முதல் பெரம்பூர் பாரதி வீதியில்; உள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தின் முன் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments