2012 ஆம் ஆண்டு கல்விப்பொது தராதர உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2012 - 2013ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்செனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார். 2012ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 24 ஆயிரம் பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.
|
மாணவர்களிடம் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதென அவர் கூறினார். இதேவேளை, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2013ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பாடசாலைகள் பரீட்சாத்திகளும் 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments