செந்தில் நாயகம் மற்றும் அரியரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக தேத்தாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த பிரதேச கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் தேத்தாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
நேற்று 23.11.2013 தேத்தாத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில இடம்பெற்ற இக் கிறிக்கட் சுற்றுப் போட்டியில் பட்டிருப்பு வுளுடயமன் மற்றும் தேத்தாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் ஆகியன இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டு, தேத்தாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இத் தொடரின் ஆட்டநாயகனாக வுளுடயமன் அணியைச் சேர்ந்த டிலக்சனும் போட்டியின் ஆட்டநாயகனாக சுசிவனும் தெரிவு செய்யப்பட்டனர்.இக் கிறிக்கட் சுற்றுப்போட்டியில் 20 க்கும் அதிகமான பிரதேச கிறிக்கட் கழகங்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments