Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்லடிப் பகுதியில் தங்குமிடம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை!


மட்டக்களப்பு, கல்லடிப் பிரதேசத்தில் தங்குமிடம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸார் இந்த முற்றுகையை மேற்கொண்டனர். இதன்போது இரண்டு பெண்களும், விடுதி உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். கைதானவர்களை இன்று புதன்கிழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments