Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாநாட்டில் கலந்து கொண்டு அழுத்தம் கொடுக்கப்படும் – பிரித்தானியா

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வது முக்கியமானது என பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியா தமது ஆசனத்தை வெறுமையாக விடாது கலந்து கொள்வதன் மூலம் தூதரக ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில்,
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய முறையில் விரிவான விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்தை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்துவார்.
ஈராக்கைத் தவிர இலங்கையில் அதிகளவில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 5676 முறைப்பாடுகள் விசாரணை செய்யாமல் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கையை வலியுறுத்தப் போவதாக வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு தொழிற் கட்சி கோரி வருகின்றது.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதனை விடவும் அமர்வுகளில் பங்கேற்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேள்வி எழுப்பி நியாயம் வழங்க முடியும் என வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments