Home » » ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலை

ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலை

ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா தெரிவித்ததாவது,
மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, ,8,000 பேர் வசித்துள்ளனர். இப்பகுதியில், ஏழு மற்றும் 10 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட மகாவிஷ்ணுவின் சிலை கிடைத்துள்ளது.



இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் புராதன நாணயங்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக கோஜ்வின்கா கூறியுள்ளார்.
இந்த புராதன கிராமத்தின் தோற்றம் மற்றும் அழிவு குறித்த சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தற்போது கிடைத்த மகாவிஷ்ணு சிலை, காட்சிக்கு வைக்கப்பட்டது.
ரிக் வேதத்தில், இப்பகுதி, புனிதத் தலமாகவும், 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலை கிடைத்திருப்பதன் மூலம், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையில் பண்டைக் காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது.
பெருமாள் கோவில்களில், பூஜை, அர்ச்சனைகள் எவ்வாறு செய்யப்படுகிறதோ அதேபோன்ற, பூஜை, அர்ச்சனைகள், ரஷ்ய சர்ச்சுகளில் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி பெயரில், அவர்களும் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |