ஹன்சிகாவை கழட்டிவிட்டு ஆண்ட்ரியாவை சிம்பு காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை நடிகர் வி.டி.வி. கணேஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் இங்க என்ன சொல்லுது.இந்த படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, இருவரும் காதலில் விழுந்ததாக செய்திகள் வெளியானது.குறிப்பாக சிம்பு படுத்திருப்பது போன்றும், ஆண்ட்ரியா அவர் அருகில் நெருக்கமாக இருப்பது போன்றும் உள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. எனவே சிம்புவின் காதலி ஹன்சிகா பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்தன.இந்நிலையில் ஹன்சிகா, காதல் காட்சிகளில் நான் கூடத் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன். நானும், சிம்புவும் நடிகர்கள், எங்களுக்கு நெருக்கமாக நடிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.
0 Comments