நேற்று மரணமானார். கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய சதீஸ்குமார் மஞ்சுளா என்ற பெண்ணே நேற்று உயிரிழந்தார்.பலவீனமான உடல் நிலையில் இருப்பதால், அடுத்த கருத்தரிப்புக்கு காலஇடைவெளி தேவை எனக்கூறி கட்டாயப்படுத்தி இவருக்கு கருத்தடை ஊசி போடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இரண்டு மாத கருவுற்றிருந்த நிலையிலேயே கருத்தடை ஊசி போடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
|
இந்தநிலையில் அவரது உடல் நிலை மோசமடையத் தொடங்கியதால், பின்னர் அதற்கு மாற்றீடான தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மிகமோசமான உடல் பாதிப்பிற்குள்ளாகி கோமா நிலைக்கு சென்ற வேளை, கடந்த 24ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து இந்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று மரணமானார். பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
|
0 Comments