Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஏறாவூர் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மூன்று விரல்கள் துண்டிப்பு....


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக் காலகமாக சித்தாண்டிப் பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் யானைகளை விரட்டுவதற்கான வெடியை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே நேற்று (19) மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த மாவடிவேம்பினை சேர்ந்த இராஜரத்தினம் (43வயது) படுகாயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவரின் வலது கைகளில் மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இடது கையில் மூன்று விரல்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments