Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் தினமும் ஆறரைக் கோடிரூபா நட்டம்! - எரிபொருள் விலைகள் எகிறும்?

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்தால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கு நாள் தோறும் ஆறரைக் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. மசகு எண்ணெய் கப்பல் கொழும்பு வராததால், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு ஆறு கோடி நாற்பது லட்ச ரூபா நட்டம் ஏற்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படாத காரணத்தினால், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மசகு எண்ணெய் இறக்குமதி செய்து பின்னர் சுத்திகரிப்பதன் மூலம் ஏற்படும் செலவுகளை விடவும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதியினால் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. அதிக செலவுகளை ஈடு செய்து கொள்ள எரிபொருள்களின் விலையை இலங்கை அரசாங்கம் உயர்த்தக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments