Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போகிறோம் - பிரித்தானியா

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் அதன் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் திட்டவட்டமான முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துச் செல்லப்போவதாக வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ஹியூகோ ஸ்வயர் நாடாளுமன்றில் கூறியுள்ளார். பொதுநலவாய மாநாட்டிற்கு வரும் ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தகவல் சேகரிக்க கட்டுப்பாடுகள் இருக்கலாகாதென்பதைத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம் எனவும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம், பொதுநலவாயம், ஐ.நா. மனித உரிமை பேரவை என்பவற்றினுடனான எமது தொடர்புகள் மூலம் இந்த விடயங்களை நாம் ஏற்கெனவே வலியுறுத்தி வந்துள்ளோமெனவும் அவர் கூறினார். வேறு நாடுகளுடனும் நாம் தொடர்புகளை வைத்திருக்கின்றோம் எனவும் அவர் கூறினார். இதற்கு மேலாக வடமாகாணத்திலுள்ள சிவில் சமூக நிறுவனங்களுடன், அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள்; பேசிவருவதாகவும் அவர் கூறினார்.
மாநாட்டின்போது பிரதமரும் தானும் இலங்கையின் களநிலவரத்தை நேரடியாகச் சென்று பார்க்கவுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுநலவாய மாநாட்டை நடத்துபவர் என்ற வகையிலும் இனிவரும் காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாலும் பொதுநலவாயத்தின் விழுமியங்களின் தராதரத்துக்கு அமைந்து செயற்பட வேண்டுமென்பதை இலங்கைக்கு தெளிவாக்கியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments