இலங்கையில் தமக்கு பாதுகாப்பு படையினர் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டதாக சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் பென் டி பியர் தெரிவித்தார். கொழும்பில் வார இறுதியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு சென்றிருந்த சனல் 4 குழுவினர் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் அவர் இதனை கூறினார். ஞாயிற்றுக்கிழமை காலையில், கொழும்பில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் எமது அறையின் கதவுக்கு அருகில் 6 பேர் கூடியிருந்தனர். அவர்கள் அறைக்குள் பிரவேசிக்க முயற்சித்தனர். இதனையடுத்து நாங்கள் இலங்கையில் இருந்து வெளியேற தீர்மானித்தோம். அவர்கள் தாம் குடிவரவு பொலிஸார் என்று தம்மை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
|
ஊடகவியலாளர்கள் வீசா விதிமுறைகளை மீறி ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ல முயற்சித்துள்ளனர் என்று அவர்கள் குற்றம்சுமத்தினர். இது ஒரு அச்சுறுத்தும் அனுபவமாக இருந்தது. அச்சுறுத்தலான பிரசாரங்களால் எமது பணிகளை தடுக்க முடியாது. இலங்கைக்கு செல்வோர் எப்போதும் காணமுடியாத வெள்ளை வான்களை அங்கு காணலாம் என்றார். விருது பெற்ற ஆவணப்படங்களான போர் தவிர்ப்பு வலயம் மற்றும் இலங்கையின் கொலைக்களம் ஆகியவற்றை உருவாக்கியதன் காரணமாக இந்த ஊடக குழுவினரை இலக்கு வைத்து இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
|
0 Comments