இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்கு முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவ போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாராத குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில் இருந்து இராணுவத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கைகளை அவர்கள் மனமார அங்கீரித்துள்ளமை புலனாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே உரையாற்றும் போதே சீ.வி. விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
|
படிப்படியான இராணுவ வெளியேற்றம் பற்றி அரசாங்கமும் கூறி வருவது மனமகிழ்வை ஏற்படுத்துகின்றது. உரிய பேச்சுவார்த்தையின் பின்னர் திடமான திட்டம் ஒன்றை இது சம்பந்தமாக வட மாகாண சபையினராகிய நாங்களும் அரசாங்கமும் தீட்ட வேண்டி வரும். தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இராணுவத்தை வடமாகாணத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையை எம்மக்கள் இனிமேல் எப்பொழுதும் இடமளிக்கமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நாங்கள் கூறிவைக்கின்றோம். இராணுவத்தினரை அகற்றாமல்; இருக்க நாடகங்கள் இயற்ற கூடும். அவற்றுக்கு யாரும் ஏமாந்து விட கூடாது. வட மாகாண தமிழ் மக்களை பொறுத்த வரை அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முரணான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள் என்பதை நாம் ஆணித்தரமாக கூறுகின்றோம்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» வடக்கிலுள்ள இராணுவம் உடனடியாக முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கிலுள்ள இராணுவம் உடனடியாக முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: