Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது - மலேசிய எதிர்க்கட்சி

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் லிம் குஹான் எங் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு மலேசிய அரசாங்கம் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments