இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோன் மூன் சோய் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். இவ்விஜயத்தின் போது யாழ். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை காலை 10.30 மணியளவில் சந்திக்கவுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தூதுவர் வடக்கின் நிலவரம் குறித்தும் குறிப்பாக வடபகுதி மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் கவனம் செலுத்துவார் எனவும் பேச்சாளர் கூறினார். நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் அவர் கலந்துரையாட உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments