இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற விவாதங்கள் இன்று கோட்டே நாடாளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற மைதானத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையொன்று பொருத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 4.00 மணி முதல் நாடாளுமன்ற மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய திரையில் விவாதங்களை மக்கள் நேரடியாக பார்வையிட முடியும். இதன் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 Comments