Advertisement

Responsive Advertisement

கொமன்வெல்த் மாநாட்டில் உரையாற்ற விக்னேஸ்வரனுக்கு அழைப்பு?

கொமன்வெல்த் மாநாட்டில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்திலே, வடக்கு மாகாண முதல்வரை கொமன்வெல்த் மாநாட்டில் பொருத்தமான நிகழ்வு ஒன்றில் உரையாற்ற அல்லது ஒரு உரையை சமர்ப்பிக்க அழைப்பதற்கான சாத்தியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் மூலம், சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளையும் வடக்கில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதையும் வெளிப்படுத்த முடியும் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும், இதுதொடர்பான இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

Post a Comment

0 Comments