கொரிய மொழி திறமைகாண் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்காக, கொழும்பு, நாலந்த, அசோக, டி.எஸ்.சேனாநாயக்க, கௌதமி மகளீர்,இசிப்பத்தான மற்றும் தேஸ்டன் ஆகிய கல்லூரியில் பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன.
இந்த பரீட்சை நிலையங்களில் 20536 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றினர் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
கொரிய மொழி திறமைகாண்;பதற்காக 11 ஆவது பரீட்சையே இன்று நடைபெற்றது. இந்த பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அடுத்த வருடத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முடியும் என்றும் அந்த பணியகம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை www.slbfe.lk, www.eps.go.kr, www.hrdkorea.or.kr இணையத்தளங்களில் வெளியிடப்படும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.
0 Comments