Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாத்தறை ஐ.தே.க குழு மோதல் தொடர்பில் கைதானவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்




மாத்தறை நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி குழு மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இந்த மோதல் தொடர்பில் இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 34 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் நேற்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மோதலுடன் தொடர்புடைய மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments