Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு கிழக்கு இணைப்பு நன்மை கிடைக்குமானால் நாம் ஆதரவு வழங்குவோம்: - விக்கிரமபாகு கருணாரத்ன

வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதால் தமிழ் மக்களுக்கு நன்மைகள் ஏற்படுமெனின் அதற்காக நாம் ஆதரவை வழங்குவோம். யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கப்படுவதனால் தான் சர்வதேசம் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது. பொது நலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இதற்கான முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
  
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:
வட மாகாண சபை தேர்தலின் முன்னர் வடக்கு வாழ் தமிழர்களுக்கு அரசாங்கம் சேவைகளையும் உதவிகளையும் வழங்கிய போதிலும் அம் மக்கள் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வெற்றிபெறச் செய்திருந்தனர். அங்கு அபிவிருத்தியை விடவும் உரிமைகளும் உணர்வுகளுக்கான சுதந்திரமும் முக்கியம் என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே தமிழ் மக்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
அதேபோன்று, வடக்கில் மக்கள் முடிவெடுத்ததைப் போன்று கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் தமது உரிமைகளை வென்றெடுக்கப் போராட வேண்டும். தமது தலைமைத்துவம் சரியானதா? கிழக்கை பாதுகாக்கக் கூடியதா என்பதை உணர்ந்து அவ்வாறானவர்களை தெரிவுசெய்ய வேண்டும்.
வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைந்து தமிழ், சிங்கள மக்கள் ஒரு அணியாகத் திரண்டு செயற்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் சிறந்ததொரு மக்கள் சக்தி உருவாகும். இவ்வாறு ஏற்படுவதை ஜனநாயகத்திற்காகப் போராடுவதை நாமும் ஆதரிக்கின்றோம்.
மேலும், நாடும் நாட்டு மக்களும் அமைதியாக இல்லாததொரு நிலையிலேயே பொதுநலவாய மாநாடு நடைபெறவிருக்கின்றது.இங்கு இருக்கும் சில சிங்கள, பெளத்த தீவிரவாத சக்திகளால்தான் சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மோசமான நாடாகக் கருதப்படுகின்றது. இதனை அரசாங்கம் கவனிக்காது செயற்படுமேயானால் நாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்�பாக, முஸ்லிம் மக்களின் மீதான அடக்குமுறைகள், பள்ளிவாசல்கள், மத ஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை என தற்போதும் சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். தற்போதும் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ளமைக்கும் இச் சம்பவங்களே முக்கிய காரணமாகும். இந்த நிலைமையினை அரசாங்கம் நிறுத்தாவிடில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான பாதுகாப்பினை அரசு வழங்காவிடின் குறுகிய காலத்திற்குள்ளேயே சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகள் இலங்கை மீது ஏற்படுத்தப்படும்.
எனவே, பொதுநலவாய அரச தலைவர் களின் உச்சிமாநாட்டின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் கவிழ்க் கப்படும். மக்களே தமது முடிவினை காட்டு வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments