புதிய காத்தான்குடி - வாச்சர் வீதியுள்ள ஐந்தாவது ஒழுங்கையில் 28 வயதான வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முஹம்மட் சித்தீக் பெனடிக் (வயது 28) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான முஹம்மட் சித்தீக் பெனடிக் என்பவர் அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments