பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! பதிலுக்கு பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்!!
யாழ்.நகரின் புறநகரையண்டிய ஆனைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பொதுமக்கள் மீது சகட்டு மேனிக்குப்பொலிஸார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையினில் இன்றிரவு 10 மணிக்கு பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிரோந்து சென்ற இரண்டு பொலிஸார்கள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதில் மாத்தளை சேர்ந்த வசந்த அபேரத்ன (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் முன்னதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தினில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி வெடி விபத்தையடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகின்றது.இதையடுத்து கோபமுற்ற இளைஞர்கள் சிலரே பொலிஸார் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கலாமென நம்பப்படுகின்றது.
0 Comments